/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயிலில் கடத்திய கஞ்சா, புகையிலை பறிமுதல்
/
ரயிலில் கடத்திய கஞ்சா, புகையிலை பறிமுதல்
ADDED : மே 23, 2025 11:42 PM
மானாமதுரை: மானாமதுரை வழியாக ஓகா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓகாவிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் செல்வதற்காக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் 2ல் நின்ற போது ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., தனுஷ்கோடி, சிறப்பு எஸ்.ஐ., ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் பெட்டியில் உள்ள கழிப்பறை அருகில் சோதனை செய்த போது அங்கு கேட்பாரற்று கிடந்த சாக்குப்பையில் 200 கிராம் கஞ்சா, புகையிலை பொருட்களை கைப்பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து அதனை கடத்தி சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.