ADDED : மார் 26, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனம் தேரடி வீதியில் போலீசார் சோதனை நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் 20, திருப்புவனம் அண்ணா நகரைச் சேர்ந்த ரஞ்சித் 22, இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
