/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெரிசலை குறைக்க முடியாது
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெரிசலை குறைக்க முடியாது
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெரிசலை குறைக்க முடியாது
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெரிசலை குறைக்க முடியாது
ADDED : பிப் 18, 2025 05:08 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவே முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்புவனத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நகர்ப்பகுதியை கடக்கவே தினமும் 20 நிமிடங்களுக்கும் மேலாகி வருவதால் தொலை தூர பஸ்கள் நகர்ப்பகுதிக்குள் வருவதை தவிர்த்து பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன.
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தவிர்த்து ஏராளமான பெண்கள் ரோட்டோரம் தரையில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
திருப்புவனத்தில் அரசு ஆண்கள், பெண்கள்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவியர்கள் தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் நகர்ப்பகுதிக்குள் வந்து செல்கின்றனர். அரசு டவுன் பஸ்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள், வேன்கள் என பலவற்றிலும் மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர திருப்புவனத்தில் உள்ள கடைகளுக்கு மதுரையில் இருந்துதான் தினசரி சரக்குகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
தினசரி இவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலையில் சாலையில் விலக கூட இடமில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மட்டுமே நகர் பகுதிக்குள் 5.5 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு 2 மீட்டர் தான் உள்ளது. இதில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். ஆனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்புவனத்தினுள் வந்து செல்கின்றன. சாலையின் இருபுறமும் 3.5 மீட்டர் அகலத்தில் ரோட்டில் ஆக்கிரமிப்புகளாக உள்ளன. இதை அகற்றாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாது, என்றனர்.

