/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர் மீது கார் மோதல் : 4 பேர் காயம்
/
டூவீலர் மீது கார் மோதல் : 4 பேர் காயம்
ADDED : பிப் 14, 2025 07:25 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மதுரை ரோட்டில் டூ வீலர் மீது கார் மோதியதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
திருப்புத்துார் ஒன்றிய ஆலம்பட்டியை சேர்ந்த சிவபழனிகுமார் மனைவி கஸ்தூரி 25 மற்றும் கருப்பூரைச் சேர்ந்த குமார் மனைவி கிருஷ்ணதேவி 40 இருவரும் டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் திருப்புத்தூரிலிருந்து மதுரை ரோட்டில் ஆலம்பட்டிக்கு சென்றனர்.
மதியம் 3:00 மணி அளவில் சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் செல்லும்போது, எதிரே மதுரையிலிருந்து காரைக்குடியைச் சேர்ந்த நாராயணன் 65 என்பவர் ஓட்டி வந்த கார் மோதி சாலை தடுப்பில் நின்றது.
அதில் கஸ்தூரி, கிருஷ்ணவேணி மற்றும் காரில் வந்த நாராயணன் 65, மனைவி விசாலாட்சி 62 ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

