ADDED : மே 30, 2025 11:57 PM

தேவகோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு மாடத்தெருவைச் சேர்ந்தவர்கள் அமல்பாண்டி. 27., ரெத்தினவேல் 57., இருவரும் நேற்று தேவகோட்டை வந்து விட்டு ஆட்டோவில் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் திருவாடானை சென்றனர்.
கர்நாடகா பதிவெண் கொண்ட கார் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்றது. கார் மாவிடுதிக்கோட்டை விலக்கு அருகே நின்றது. அப்போது ஓரியூரிலிருந்து தேவகோட்டை வழியாக காரைக்குடிக்கு கார் வேகமாக வந்தது. விலக்கில் திரும்பும் போது நின்ற கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் முன்னால் நின்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி முன்னே சென்ற ஆட்டோவில் மோதியது.
இதில் வாகனங்கள் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்ததில் உருக்குலைந்து போயின. ஆட்டோவில் வந்த அமல்பாண்டி ரத்தினவேல் இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கார்களில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.