/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
/
ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 17, 2024 05:01 AM
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மிக்கேல்பட்டினம்ஊராட்சி தலைவராக பாரதி 42, என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பசும்பொன் ராஜாவிற்கும் பாரதிக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் சாட்சி சொல்ல வரக்கூடாது என பசும்பொன்ராஜா ஊராட்சி தலைவர் பாரதியின் மனைவி ஜெயஸ்ரீ 30, நண்பர் மாரீஸ்வரி 31, ஆகியோரை மிரட்டி உள்ளார்.
ஜெயஸ்ரீ புகார்படி திருப்பாச்சேத்தி போலீசார் பசும்பொன் ராஜா மீதும், பசும்பொன் ராஜா புகார்படி பாரதி, ஜெயஸ்ரீ, சமயதுரை, மோகன் ஆகிய நான்கு பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.