திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி ரயில்வே கேட் அருகே ஹாரன் அடித்ததில் ஏற்பட்ட தகாரறில் பெண்கள்,சிறுவர்களை தாக்கிய ராணுவ வீரர் உட்பட ஆறு பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி கீதா, உறவினர்கள் பிரேமா 40, வர்ஷன்12, மற்றும் சிலருடன் இரண்டு கார்களில் தஞ்சாக்கூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு மதுரை திரும்பினர்.
திருப்பாச்சேத்தி ரயில்வே கேட் அருகே கார் முன்னால் இரு டூவீலர்களில் ஐந்து பேர் சென்றதால் ஹாரன் அடித்துஉள்ளார். ஆத்திரத்தில் டூவீலரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு வந்து தகராறு செய்துள்ளனர். தடுத்த கீதா, பிரேமா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கீதா புகார்படி திருப்பாச்சேத்தி போலீசார் கங்காணி, ராஜாமணி, ராணுவ வீரர் ரகுபதி, ஜோதிமணி, நேரு, துரைமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க கங்காணி வீட்டிற்கு திருப்பாச்சேத்தி போலீசார் சென்ற போது கங்காணி அவரது மனைவி அம்சவல்லி உள்ளிட்டோர் தகராறு செய்துள்ளனர்.
இதில் தன்னை போலீசார் தாக்கியதாக அம்சவல்லி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.