ADDED : ஏப் 18, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்:திருப்புவனம் அருகே அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தியவர்கள் மீது பழையனுார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
பிரமனூர் கண்மாயில் உரிய அனுமதியின்றி சிலர் கருவேல மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். .இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய்துறை, பொதுப்பணித்துறையினருக்கு புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவே இல்லை. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து பிரமனூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் 57, புகாரின் படி பழையனூர் போலீசார் அல்லி நகரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்,
