ADDED : ஜன 22, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
எஸ்.புதுார்: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பஸ் டெப்போவில் இருந்து முசுண்டபட்டி வழியாக துவரங்குறிச்சிக்கும், திருச்சிக்கும் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராததுடன், வேறு பாதையில் இயக்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஜன. 19 ல் அப்பேருந்துகளை முசுண்டபட்டியில் சிறைபிடித்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக முசுண்டபட்டி, கானப்பட்டி, சின்னாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுப்பிரமணியன், கவுரி, முத்துச்சாமி, சின்னையா, வெள்ளைச்சாமி உள்ளிட்ட 20 பேர் மீது புழுதிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
