/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்
/
காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்
ADDED : டிச 18, 2024 06:37 AM
சிவகங்கை: ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குழாய்களை இணைக்கும் பணிக்காக இன்றும், நாளையும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் இருக்காது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் திருச்சி முத்தரசநல்லுார் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் நீரோட்ட குழாய்களுடன், புதிதாக பொருத்தப்பட்ட குழாய்களை இணைக்கும் விதமாக பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக இன்றும் (டிச.,18), நாளையும் (டிச.,19) சிவகங்கை மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது, என்றார்.