/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிகிதா நகை திருட்டு வழக்கு அமைதி காக்கும் சி.பி.ஐ.,
/
நிகிதா நகை திருட்டு வழக்கு அமைதி காக்கும் சி.பி.ஐ.,
நிகிதா நகை திருட்டு வழக்கு அமைதி காக்கும் சி.பி.ஐ.,
நிகிதா நகை திருட்டு வழக்கு அமைதி காக்கும் சி.பி.ஐ.,
ADDED : நவ 06, 2025 02:12 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா நகை காணாமல் போன வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் அமைதி காத்து வருகின்றனர்.
ஜூன் 27ல் நிகிதா சாமி கும்பிட வந்தார். அவரது நகை காணாமல் போனது குறித்த தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து ஆக.,1ம் தேதி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து ஆக.,20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
நகை திருட்டு வழக்கையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து செப்டம்பரில் விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றவாளியை நெருங்கிவிட்டதாக தகவல் பரவியது. அத்துடன் சரி அதன் பின் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை குறித்த எந்த தகவலும் இல்லை. நகை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியவில்லை.
ஜூன் 27ல் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் மதுரை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதுவரை வழங்கப்படாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

