ADDED : மே 07, 2025 02:12 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வலியுறுத்தி சிவகங்கையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் டூவீலர் ஊர்வலம் நடத்தினர்.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், செல்வம், பிச்சை, மாரிமுத்து, அன்பரசு, காளிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் உட்பட மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
