ADDED : பிப் 20, 2024 12:18 AM
சிவகங்கை, - மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்.15ம் தேதி மற்ற மாநிலங்களில் தொடங்கிய நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்புக்கும், பிளஸ் 2க்குபிப்.22ம் தேதியும் துவங்குகிறது.
10ம் வகுப்பில் 1026 மாணவர்களும், பிளஸ் 2வில் 691 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, சிவகங்கை மான்போர்ட் பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் நடைபெறுகிறது.
10ம் வகுப்பிற்கு மார்ச் 13ம் தேதியும் பிளஸ் 2க்கு ஏப்.2ம் தேதியும் தேர்வு முடிவடைகிறது. தேர்வு மையங்களுக்கு காலை 10:00 மணிக்கு முன்பே வர வேண்டும்.
தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கும். காலை 10:00 மணிக்குள்தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
