/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டு முயற்சியால் முன்னேற்ற பாதையில் செல்லப்பன் வித்யா மந்திர்
/
கூட்டு முயற்சியால் முன்னேற்ற பாதையில் செல்லப்பன் வித்யா மந்திர்
கூட்டு முயற்சியால் முன்னேற்ற பாதையில் செல்லப்பன் வித்யா மந்திர்
கூட்டு முயற்சியால் முன்னேற்ற பாதையில் செல்லப்பன் வித்யா மந்திர்
ADDED : அக் 01, 2025 07:42 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாணவர்களின் கல்வி விளையாட்டு கலை சமூக பணி போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாக தாளாளர் சத்தியன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களின் கல்வி மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் மாணவர்கள் புத்தக அறிவோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை அறிவையும் கற்றுக் கொள்கின்றனர். ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல், கணினி, கணக்கு ஆய்வகங்கள், நூலக வசதிகள் உள்ளன. ஆங்கிலத்தை முதன்மையாக கொண்டு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி பிரெஞ்சு ஆகிய பன்மொழிகள் கற்பிக்கப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் 2 ஆயிரம் பேர் அமரக்கூடிய உள் அரங்கம் கால்பந்து கிரிக்கெட் கூடை பந்து டென்னிஸ் போன்றவற்றிற்கு தனித்தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பள்ளி மூன்றாவது முறையாக தொடர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கைலாஷ் என்ற மாணவர் தேசிய சி.பி.எஸ்.இ., கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய காற்றோட்டமான சுத்தமான அறைகள், படிப்பதற்கு தனி இடம் விடுதியின் சிறப்பம்சங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவது சாதனையாகும். பல மாணவர்கள் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். தொழில் வழிகாட்டல் வகுப்புகள் ஒலிம்பியாட் ஐ.ஐ.டி., நீட், யூ.பி.எஸ்.சி., பவுண்டேஷன் வகுப்புகள் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்களை மேம்படுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மாநில அரசால் தூய்மையான பள்ளி என்று அறிவிக்கப்பட்ட பெருமையை பெற்றுள்ளது இப்பள்ளி. சர்வதேச பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டுச் சாதனைகளால் பிராந்தியத்தின் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது.
மாணவர்களின் முயற்சி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பெற்றோர்களின் உறுதி ஆகியவற்றின் கூட்டு முயற்சி விளைவாக பள்ளி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் நகர்ந்து வருகிறது என்பதில் ஐயமில்லை என்றார்.