ADDED : பிப் 13, 2024 07:05 AM
தேவகோட்டை, : தேவகோட்டை தாலுகாவில் உள்ளது கொசவந்தானிவயல் கிராமம். இக்கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மயானம் செல்ல பாதை இல்லை.
மேலும் கண்மாய் கலுங்கு, கண்மாய் வரத்துக்கால், அருகில் உள்ள தானிக்கண்மாய் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கிறது.
ஆக்கிரமிப்பை அகற்ற 2016ல் கோட்டாட்சியரிடமும், 2023ல் இரண்டு முறை கலெக்டரிடமும் மனுக்கள் கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கொசவந்தானிவயல் மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு குடியமர்வு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
நேற்று கோட்டாட்சியர் பால்துரையை சந்தித்து மனுக் கொடுத்தனர். ஒரு வாரத்தில் இடங்களை அளந்து பாதை தருவதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.