UPDATED : மே 26, 2026 04:21 PM
ADDED : மே 26, 2026 04:20 PM

சிவகங்கை:சிவகங்கையில் வீட்டு பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்பு துவங்கியது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு துணை இயக்குனர் வசந்தகுமார், ஒருங்கிணைப்பு அலுவலர் பத்மநாபன், தலைமை பயிற்சியாளர் கோதையம்மாள், கலெக்டர் பி.ஏ.,( பொது) விஜயகுமார், கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தேவகோட்டை கோட்டாட்சியர் (பொறுப்பு) ஸ்ரீதர், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பேரூராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக ஆன்லைனில் சுயமாக விபரங்களை மக்களே பூர்த்தி செய்யலாம். அடுத்ததாக வீடு பட்டியல், அதில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் விபரம் போன்றவை வீடு தோறும் செல்லும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்த ஆண்டு பிப்., ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என பயிற்சி கூட்டத்தில் தெரிவித்தனர்.
