UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 09:28 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கவிஞர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா நடந்தது. தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிறுவனத்தலைவர் ஜவகர்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.
கல்லுாரி மாணவர்களுக்கு என்னுள் கண்ணதாசன் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ், துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டனர். பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.
