/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய கூட்டுறவு வங்கி லாபம் ரூ.8.29 கோடி
/
மத்திய கூட்டுறவு வங்கி லாபம் ரூ.8.29 கோடி
ADDED : ஜூலை 24, 2025 06:37 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கடந்தாண்டு (2024--2025) லாபம் ரூ.8.29 கோடியாக உள்ளது.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், மாவட்டத்தில் 32 கிளைகள் செயல்படுகின்றன. விவசாயம், நகை அடமானம், தொழில், சுய உதவி குழு உட்பட 20க்கும் மேற்பட்ட இனங்களில் கடன் வழங்கப்படுகின்றன. 2024--2025ம் ஆண்டிற்கான பொது ஆண்டறிக்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வெளியிடப்பட்டன. 2024 மார்ச் முதல் 2025 மார்ச் வரை மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் 358 உறுப்பினர்களிடம் இருந்து பங்கு தொகையாக பெற்றதன் மூலம் பங்கு மூலதனம் ரூ.98.73 கோடியாக உள்ளது.
வங்கி ஈட்டிய லாபம் ரூ.8.29 கோடி கடந்த சில ஆண்டிற்கு முன் நலிவடைந்த நிலைக்கு சென்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இந்த ஆண்டு லாபம் ரூ.8 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 475 வரை பெற்றுள்ளது. இந்த வங்கி கிளைகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நடப்பு, சேமிப்பு, பிக்செட் டிபாசிட் மூலம் ரூ.667.50 கோடி வரை வைப்பு தொகை பெறப்பட்டுள்ளன.
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், விற்பனை சங்கங்கள் மூலம் நகை அடமானத்தின் பேரில் ரூ.556.29 கோடி கடன் வழங்கியுள்ளனர். மாவட்ட அளவில் 1,281 மகளிர் குழுக்களுக்கு ரூ.114.17 கோடி சுழல் நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது. வேளாண் கடன் அட்டை மூலம் 36 ஆயிரத்து 925 விவசாயிகளுக்கு ரூ.264 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரம் வரை விவசாய கடனாக வழங்கியுள்ளதாக வங்கி பேரவை கூட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.