ADDED : ஏப் 01, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:பரமக்குடி அருகே கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நீலாவதி 51. இவர் மார்ச் 8 அன்று உறவினரான சரஸ்வதி என்பவருடன் காலை 10:45 மணிக்கு பரமக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் தனியார் பஸ்சில் காளையார்கோவில் சென்றார்.
அதிகரை விலக்கு அருகே பஸ் செல்லும் போது கழுத்தில் இருந்த செயினை யாரோ இழுப்பது போல் உணர்ந்தார். தனது செயினை கழற்றி பர்சில் வைத்துள்ளார். பஸ் காளையார்கோவில் வந்தவுடன் இறங்கி பர்சை பார்த்தார். பர்சில் இருந்த 5 அரை பவுன் தங்க செயின் திருடுபோய் உள்ளது. திருடுபோன தங்க செயினை கண்டுபிடித்து தரும்படி நீலாவதி நேற்று முன்தினம் இளையான்குடி போலீசில் புகார் அளித்தார்.
