UPDATED : மே 13, 2026 05:03 PM
ADDED : மே 13, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:மதகுபட்டி அருகே காடனேரி கிராமத்தில் உள்ள கருமுகிலுடைய அய்யனார், சோனைகருப்பணசாமி கோவில் சந்தனகுட ஊர்வலம் (மே 13) நடந்தது.
காலை 9:30 மணிக்கு காப்புகட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இதில் குலதெய்வம் வழிபடுவோர் கிராம மக்கள் காப்புகட்டி விரதம் இருந்து (மே 13) சந்தனகுட ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து (மே 14) காலை 8:00 மணிக்கு 16 ஆம் ஆண்டு பால்குடம் வைபவமும் அதனை தொடர்ந்து கருமுகிலுடைய அய்யனார், சோனைகருப்பணசாமிக்கு அபிேஷக ஆராதனை அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடந்த சந்தனகுட ஊர்வலத்தில் சுற்றுவட்டார மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
