ADDED : நவ 07, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் வசந்தகுமார் 23. இவர் நவ.3 இரவு வீட்டின் முன் நின்றார். அப்போது டூவீலரில் வந்த இருவர் வாளால் கை,கால் மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பினர். உறவினர்கள் காயம் அடைந்தவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் சேர்த்தனர். வசந்தகுமார் சித்தப்பா செந்தில்குமார் நகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய வர்களை தேடினர். இந்நிலையில் கீழக்கண்டனி திருப்பதி மகன் ராஜபாண்டி 23 நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை பி.சி.ஆர்., நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.