தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விசா வாங்கி தருவதாக மோசடி

 விசா வாங்கி தருவதாக மோசடி

 விசா வாங்கி தருவதாக மோசடி


ADDED : செப் 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஓரிக்கோட்டையை சேர்ந்தவர் ஜார்ஜ் மனைவி ஆரோக்கிய ஜோஸ்லின் 28. இவரது கணவர் ஜார்ஜ்க்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக காரைக்குடி இந்திரா நகர் முதல் வீதி குலசேகரன் மகன் நாகராஜன் 29, தெரிவித்துள்ளார்.

இதை நம்பி, நாகராஜனிடம் விசாவிற்காக ரூ.4.50 லட்சம் வழங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும், விசா ஏற்பாடு செய்யவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தரவில்லை. பழக்கம் என்பதால் நாகராஜனுக்கு இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியையும் கொடுத்துள்ளனர். அதையும் திருப்பி தரவில்லை. பணம், நகையை திருப்பி தராததோடு தங்களை அவதூறாக பேசியதாக ஆரோக்கிய ஜோஸ்லின் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ந டத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us