ADDED : ஜன 24, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வேதியியல் துறை சார்பில் வேதியியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இணைப்பேராசிரியர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். உதவிப்பேராசிரியர் லோகநாதன் வாழ்த்தினார்.
அமெரிக்கா சான்டிகோ ஸ்டேட் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான், சுயநிதிபாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான், கல்வியியல் கல்லுாரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான், உதவிப்பேராசிரியை ரேவதி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியை அப்ரோஸ் நன்றி கூறினார்.

