ADDED : பிப் 13, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் செஸ் போட்டி நடந்தது.
போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ ஹரி 8 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார். உக்ரேனின் ஐ.எம் சிட்னிகோவ் ஆண்டன் மற்றும் சென்னை சாய் விஸ்வேஸ் ஆகியோர் 5.5 புள்ளிகளை பெற்று இரண்டு மற்றும் மூன்றாமிடத்தை பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவர் குமரேசன் பரிசுகள் வழங்கினார். பள்ளி முதல்வர் உஷா குமாரி வரவேற்றார். தமிழ்நாடு மாநில செஸ் சங்க துணை தலைவர் விஜயராகவன் நன்றி கூறினார்.