/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளிக்கு செட்டிநாடு காட்டன் சேலை
/
தீபாவளிக்கு செட்டிநாடு காட்டன் சேலை
ADDED : அக் 07, 2025 04:00 AM

காரைக்குடி: தீபாவளி பண்டிகைக்காக கானாடுகாத்தானில் தயாரிக்கப்பட்ட செட்டிநாடு காட்டன் சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
புவிசார் குறியீடு பெற்ற செட்டிநாடு காட்டன் சேலைக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தீபாவளி பண் டிகைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செட்டிநாடு காட்டன் சேலையை உடுத்துவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இதற்காக காரைக்குடி பகுதியில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் செட்டிநாடு காட்டன் சேலைக்கு வரவேற்பு அதிகம் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், பிற மாநில பெண்கள் அதிகளவில் செட்டிநாடு காட்டன் சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இது தவிர தமிழக அளவில் இருந்தும் ஜவுளி கடைகளில் விற்பனை செய்ய காரைக்குடி பகுதி கைத்தறி நிலையங்களில் இருந்து செட்டிநாடு காட்டன் சேலைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.