தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெருக்கடியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்

நெருக்கடியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்

நெருக்கடியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்


ADDED : செப் 23, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இட நெருக்கடியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலு வலகம் செயல்படுவதால் ஊழியர்கள் அவதிப் படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணி அலுவலகம், யூனியன் ஆபீஸ் ரோட்டில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. 7ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்திற்கு மாற்றப் பட்டது. அங்கு இடப் பற்றாக்குறைக்கு மத்தியில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அலுவலகத்துக்கு தனியாக இடம் ஒதுக்கி புதிய கட்டடம் கட்ட பலமுறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 7ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வொன்றியத்தில் உள்ள 94 அங்கன் வாடிகளில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், அவர்களுக்கான கூட் டங்கள், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை நடத்த இட வசதி இல்லாமல் அலுவலர்கள் அவதிப் படுகின்றனர்.

ஒன்றிய அலு வலக வளாகத்திலேயே குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கும் இடம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டி தர ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us