/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சில் சிம்னி விளக்கு வெளிச்சம்; திருப்புவனத்தில் தவிக்கும் கண்டக்டர்கள்

ADDED : ஜன 30, 2024 01:39 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் விளக்கு சரி வர எரியாததால் கண்டக்டர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.
இதுதவிர கும்பகோணம் கோட்டம் சார்பில் சிவகங்கையில் இருந்து திருப்புவனம், பழையனுார், ஓடாத்துார், சொக்கநாதிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மகளிருக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டதில் இருந்து டவுன் பஸ்களால் போக்குவரத்து கழகத்திற்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் டவுன் பஸ்களை பணிமனைகளில் பராமரிப்பதே இல்லை. பல டவுன் பஸ்களில் பிரேக், டயர் உள்ளிட்டவை சரிவர இன்றி பழுதான நிலையிலேயே இயக்கி வருகின்றனர்.
டவுன் பஸ்களை நஷ்டத்துடன் இயக்கி வருவதால் பயணிகளை அந்தந்த நிறுத்தத்தில் நிறுத்தி ஏற்றி இறக்காமல் சில ஊழியர்கள் அலட்சியம் காட்டி வரும் நிலையில் பல டவுன் பஸ்களின் உட்புற விளக்கும் எரிவதில்லை. ஒரே ஒரு விளக்கு மட்டும் சிம்னி விளக்கு போல எரிவதால் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
பஸ்சின் முகப்பு விளக்குகளும் சரி வர எரியாமல் அடிக்கடி இரவு நேரத்தில் விபத்தும் ஏற்படுகின்றன.