/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 04:55 AM

காரைக்குடி: காரைக்குடி செக்காலை துாய சகாய மாதா சர்ச்சில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில், உதவி பங்கு தந்தை டானியல் திலீபன், அருட்தந்தையர்கள் அகஸ்டின் அந்தோணிசாமி கலந்து கொண்டனர். இதில், சகாய கீதங்கள் என்ற புதிய பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.
காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்குதந்தையர் விக்டர், பிலிப் சுதாகர், திண்டுக்கல் பங்குதந்தை ஜேசுதாஸ்,அகஸ்டின், செஞ்சை ஆலய பங்குதந்தை கிளமென்ட் ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசன் தலைமையில் பங்குத்தந்தை லாரன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நள்ளிரவு 12:00 மணிக்கு இயேசு பிறப்பு செய்தி வாசிக்கப்பட்டது. மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
* மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச்சில் பங்குத்தந்தை சார்லஸ் கென்னடி தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் மேலப்பசலை, வான்புரம், கேப்ரனுார் மற்றும் இளையான்குடி பகுதியில் உள்ள பல்வேறு பகுதி சர்ச்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றன.
* காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு வின்சென்ட் தே பவுல் சபையின் அருளானந்தர் கிளைச் சபை சார்பாக மக்களுக்கு புத்தாடை வழங்கினர்.
பங்குத்தந்தை சேசு, உதவிப் பங்குத்தந்தை பாஸ்டின் பாரதி தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் அன்புநாதன் வரவேற்றார். கிளைத் தலைவர் ஆரோக்கியசாமி, மத்திய சபைத் தலைவர் பெர்னாட்ஷா, மத்திய சபை பொருளாளர் அமிர்தசாமி, கல்வி திட்ட அலுவலர் சூசைராஜ், சூசையப்பர் பட்டணம் வட்டார சபைத் தலைவர் அருள், ஆண்டிச்சியூரணி கிளைத் தலைவர் ஜான் அந்தோணி பேசினர். கிளைப் பொருளாளர் பால்ஜோசப் நன்றி கூறினார்.

