ADDED : டிச 26, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: புளியால் பெரியநாயகி அன்னை சர்ச்சில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இரவு திருப்பலி தொடங்கப்பட்டு 12:00 மணிக்கு இயேசு பிறப்பு வரவேற்பு பாடல்கள் பாடினர்.
பாதிரியார் அம்புரோஸ் திருப்பலி நடத்தினார். மதுரை பாதிரியார் ஜெயபால் மறையுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் உதவி பங்கு பாதிரியார், அருட்சகோதரிகள், புளியால் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

