ADDED : மார் 31, 2025 06:25 AM

திருப்புத்தூர் : திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக்., பள்ளியில் வெள்ளி விழா நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பு வகித்தனர்.
விழாவிற்கு பள்ளி தலைவர் ஏ.டி.,விக்டர் முன்னிலை வகித்தார். முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார்.
தாளாளர் ரூபன் ஆண்டு அறிக்கை வாசித்தார். கே.ஏ.எஸ்., இம்பெக்ஸ் இந்தியா நிர்வாக மேலாளர் கரு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்கள் சென்னை வில்லிவாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், போலீஸ் கமிஷனர் (ஓய்வு) எழிலரசு சிறப்பு வகித்தனர். முன்னாள் மாணவர்கள் கதிரேசன், அப்துல்லா, அமிர்தலிங்கம், பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது வாழ்த்துரை வழங்கினர்.
வீட்டில் நுாலகம் அமைத்து பராமரித் வரும் மாணவர்கள் 10 பேர் வாசிப்பின் நன்மை குறித்து பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பள்ளி மாணவ தலைவி ஹர்ஷினி நன்றி கூறினார். அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.