/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுள்ளாம்பட்டி வட மஞ்சுவிரட்டு: 20 பேர் காயம்
/
சுள்ளாம்பட்டி வட மஞ்சுவிரட்டு: 20 பேர் காயம்
ADDED : ஜன 22, 2024 05:10 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சுள்ளாம்பட்டியில் பொங்கலை முன்னிட்டு 6ஆம் ஆண்டு வட மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமுற்றனர்.
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 18 காளைகள் பங்கேற்றன. மருத்துவ குழுவினரால் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து காளைகளை பிடிக்க ஒரு அணிக்கு 9 பேர் வீதம்162 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு களத்தில் விளையாட விடப்பட்டது. இதில் 2 காளையை தவிர மீதமுள்ள காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகள் முட்டியதில் 20 பேர் காயமுற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.