தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இரு பிரிவினர் இடையே மோதல் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 இரு பிரிவினர் இடையே மோதல் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 இரு பிரிவினர் இடையே மோதல் 2 பேருக்கு அரிவாள் வெட்டு


ADDED : ஆக 16, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர். இவர்கள் மானாமதுரை பைபாஸ் ரோடு ரயில்வே கேட் அருகே வந்துபோது மற்றொரு பிரிவினருடன் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு பிரிவினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் ஏ.விளாக்குளம் கிராமத்தை சேர்ந்த பாபு, முனீஸ்வரன் ஆகியோர் அரிவாள் வெட்டுபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்றொரு தரப்பை சேர்ந்த மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் ஸ்டீபன் ராஜ், ராஜேந்திரன் (எ) மாணிக்கம் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., லோகநாதன், சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலை தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் மானாமதுரை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us