ADDED : நவ 03, 2024 05:46 AM
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே வாணியங்காடு, தென்மாப்பட்டு பகுதியில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் காயமடைந்தனர். 5 பேர் கைதாகியுள்ளனர்.
திருப்புத்தூர் அருகே தென்மாப்பட்டு புறவழிச்சாலையை அடுத்து உள்ள டாஸ்மாக் கடையில் தீபாவளிக்கு முதல்நாள் இரு தரப்பினர் மோதினர். தொடர்ந்து வெளியே வந்தும் இரு தரப்பினரும் தகராறு செய்ததில் கத்தி குத்தில் முடிந்தது.
அதில் காரைக்குடியைச் சேர்ந்த ராமேஸ்வரன், தென்மாப்பட்டைச் சேர்ந்த சதீஸ், வினோத்குமார் ஆகியோர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் திருப்புத்தூர் போலீசார் காரைக்குடியைச் சேர்ந்த சதீஸ் 21, சூர்யா23, அசோகன் 21 ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
நேற்று திருக்கோஷ்டியூர் போலீசார் இதேமோதலில் அவர்கள் பகுதியில் நடந்த சம்பவத்திற்காக குணா22,மணிகண்டன் 21 ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.