ADDED : ஜன 08, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அரசு உதவி பெறும் கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா தலைமை வகித்தார். தியாகராசர் பொறியியல் கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிக்குழுத் தலைவர் கண்ணப்பன், பள்ளிச் செயலர் நாகராஜன், பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மேலாளர் சுப்பையா, பழனியப்பன், கண்ணப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், முன்னாள் தலைமையாசிரியர் மகாலெட்சுமி கலந்து கொண்டனர். ஆசிரியர் தனலெட்சுமி நன்றி கூறினார்.
