/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிளியூர் ஊராட்சி தலைவர் துணைத்தலைவர் மோதல்
/
கிளியூர் ஊராட்சி தலைவர் துணைத்தலைவர் மோதல்
ADDED : ஜன 13, 2024 05:39 AM
தேவகோட்டை, : தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கிளியூர் ஊராட்சி. ஊராட்சி தலைவர் கண்ணன் தலைமையில் மாதாந்திர ஊராட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணைத் தலைவரான மருதவயல் ஆரோக்கியராஜ் சாக்கடை நீர் செல்வதும் பற்றியும், இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தலைவர் கண்ணனிடம் கேட்டு உள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பின் இருவரும் மோதிக்கொண்டனர்.
அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து தலைவர் கண்ணனும், துணை தலைவர் ஆரோக்கியராஜும் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் தனித்தனியே புகார் செய்தனர். இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.