ADDED : ஜன 30, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், கோட்டாட்சியர் விஜயகுமார், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார், விடுதி வார்டன்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

