/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக் 2 வது நாளாக பணி பாதிப்பு
/
கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக் 2 வது நாளாக பணி பாதிப்பு
கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக் 2 வது நாளாக பணி பாதிப்பு
கூட்டுறவு பணியாளர்கள் ஸ்டிரைக் 2 வது நாளாக பணி பாதிப்பு
ADDED : அக் 23, 2024 05:51 AM
சிவகங்கை : கூட்டுறவு பணியாளர்கள் 'ஸ்டிரைக்கால்' இரண்டாவது நாளாக தொடக்க கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை விற்பனை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளரின் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அக்., 21 முதல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தி வருகின்றனர். தீபாவளி காலத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பூட்டியதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாவட்ட அளவில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், 121 சங்கங்கள் 2 வது நாளாக நேற்றும் பூட்டி கிடந்ததால், விவசாயிகளுக்கான பயிர்கடன், நகை அடமான கடன் பெறுதல், உரம் வாங்குதல் உள்ளிட்ட கூட்டுறவு வங்கி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆலோசனை கூட்டம்
அடுத்த கட்ட போராட்டம் குறித்து குன்றக்குடியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன், துணை தலைவர்கள் கோபிநாதன், பரமானந்தம், இணை செயலாளர்கள் ராமசாமி, முத்து மாயாண்டி உட்பட சங்க நிர்வாகிகள், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அனைவரும் பங்கேற்றனர்.
மாநில சங்க நிர்வாகிகள் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்தனர்.