/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயத்தை அழிக்கும் பன்றிகள் கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை
/
விவசாயத்தை அழிக்கும் பன்றிகள் கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை
விவசாயத்தை அழிக்கும் பன்றிகள் கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை
விவசாயத்தை அழிக்கும் பன்றிகள் கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை
ADDED : ஜன 06, 2024 05:58 AM
திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், கலியாந்துார், அல்லிநகரம், பிரமனுார், ஏனாதி, தேளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் நடந்து வருகிறது. மழை இல்லாததால் கண்மாய்களில் உள்ள கருவேல மர காடுகளில் தஞ்சமடைந்த பன்றிகள் பெருகிவிட்டன. ஒவ்வொரு கண்மாயிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக உள்ளன. இரவு நேரங்களில் வெளியேறும் பன்றி கூட்டம் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாரையடுத்து மாவட்ட கலெக்டர் மதுரையில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவை வரவழைத்து பன்றிகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று முதல் பன்றிகளை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
அதுபோல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பன்றிகளையும் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.