/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தலை புறக்கணிக்க உரிமை இல்லை; கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
/
தேர்தலை புறக்கணிக்க உரிமை இல்லை; கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
தேர்தலை புறக்கணிக்க உரிமை இல்லை; கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
தேர்தலை புறக்கணிக்க உரிமை இல்லை; கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
ADDED : மார் 17, 2024 11:51 PM

சிவகங்கை : தேர்தலை புறக்கணிக்க மக்களுக்கு உரிமை இல்லை. இதை துாண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என சிவகங்கையில் நடந்த சர்வ கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சர்வ கட்சியினர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன், கோட்டாட்சியர்கள் விஜயகுமார், பால்துரை, கலெக்டர் பி.ஏ.,(நிலம்) சரவண பெருமாள், பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் நிரந்தரமாக 40, தற்காலிகமாக 32 இடத்தில் மட்டுமே கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும். தேர்தல் அலுவலர் அனுமதி பெற்று தான் கூட்டம், பிரசாரம் நடத்த வேண்டும்.
காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை பிரசார நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகன பிரசாரம், கூட்டம் உட்பட அனைத்து அனுமதியையும் ''http://suvidha.eci.gov.in'' இணையதளம் மூலமே பெற வேண்டும்.
அனுமதிக்காக 48 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவு செய்தோருக்கு முன்னுரிமை படி அனுமதி தரப்படும்.
அரசியல் கட்சியினர் வாகனங்களில் கட்சி கொடி கட்டக்கூடாது. ஒரு நபர் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம். அதற்கு மேல் பணம் இருந்தால் உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். வேட்பாளர் தேர்தல் செலவு அதிகபட்சம் ரூ.95 லட்சம் வரை மட்டுமே. மாவட்ட அளவில் 14 சோதனை சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடக்கும்.
ஆன்லைன் மூலம் கட்சி விளம்பரம் செய்தாலும், செலவு தொகை அக்கட்சி அல்லது வேட்பாளர் கணக்கில் ஏற்றப்படும். அலுவலக பணிகள், அடிப்படை வசதிகள் தொடர்ந்து நடைபெறும்.
மார்ச் 16 மதியம் 3:00 மணிக்கு பின் புதிதாக கட்டுமானம், டெண்டர் விடும் பணிகள் நடக்காது. பொதுமக்கள் குறைதீர் மனுக்களை கலெக்டர் அலுவலக பெட்டியில் போடலாம். மக்கள் தேர்தலை புறக்கணிக்க உரிமை இல்லை. அதே நேரம் தேர்தல் புறக்கணிப்பை துாண்டி விடுவோர், ஓட்டு போடக்கூடாது என தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
இக்கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, பொது செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஓ.பி.சி., அணி நாகேஸ்வரன், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், ஏ.ஆர்.பி., முருகேசன், நகர் தலைவர் விஜயகுமார், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தேவதாஸ், ஆம் ஆத்மி மாவட்ட தலைவர் சோமன், செயலாளர் ராமு, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, நகர் செயலாளர் மருது, மார்க்சிஸ்ட் நிர்வாகி மெய்யப்பன், நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றனர்.

