ADDED : மார் 13, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் 18வது ஆண்டு விழா நடந்தது.
முதல்வர் சசிக்குமார் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குநர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். விவேகானந்தா கல்விக்குழுமத் தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமையுரையாற்றினார்.
விவேகானந்தா நர்ஸிங் கல்லுாரி முதல்வர் மாலதி, விவேகானந்தா கல்வியியல் கல்லுாரி முதல்வர் சரவணன் வாழ்த்தினர். இயக்குநர் சிவநந்தினி பங்கேற்றார்.
அக்.25 வாரியத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாணவ, மாணவியர்,100 சதவீத வருகைப்பதிவு உள்ளவர்கள், அதிக தேர்ச்சி விகிதம் கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
