ADDED : பிப் 11, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக நேர்காணல் நடந்தது.
இயந்திரவியல்,மின்னியியல் துறை, மின்ணணு துறை, மெக்காட்ரானிக்ஸ் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். பிரேக்ஸ் இந்தியா பி. லிட் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர் அஜித் வளாக நேர்காணல் நடத்தினார். 60 மாணவர்கள் தேர்வுப் பெற்று பணி நியமன ஆணை பெற்றனர். மெக்கட்ரானிக்ஸ் துறை விரிவுரையாளர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் அபினேஷ் ஒருங்கிணைத்தார். மெக்காட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சுபாகர் நன்றி கூறினார்.
