/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்ற தாசில்தார் அலுவலகத்தில் கல்லுாரி மாணவர்கள்

ADDED : நவ 24, 2025 09:32 AM
சிவகங்கை: சிறப்பு தீவிர திருத்த பணிக்காக வாக்காளர் வழங்கும் படிவங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் கல்லுாரி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2002 ம் ஆண்டைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலுடன், 2025ம் ஆண்டுக்கான வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் வினியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை அவர்களே பெற்று ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க டிச., 4 கடைசி நாளாகும்.
இதற்காக திருத்தப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளரிடம் பூர்த்தி செய்த படிவங்களை வாங்கி, அவற்றை உடனே அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த படிவங்களில் உள்ள விபரங்களை உடனே ஆன் லைனில் பதிவேற்றம் செய்வதற்காக, அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் கல்லுாரி, பாலிடெக்னிக் மாணவர்களை நியமித்து அலைபேசி மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்களிலும் ஏராளமான மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.