நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், கலெக்டர் ஆஷா அஜித்துடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டு பெட்டிகள் இருப்பு, நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் இருப்பு விபரம், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்தும் ஆலோசனை செய்தார். ஆலோசனையில் கலெக்டர் பி.ஏ.,(வளர்ச்சி) அன்பு, அலுவலக மேலாளர் பத்மநாபன் (வளர்ச்சி) பங்கேற்றனர்.