ADDED : அக் 16, 2024 04:08 AM
மானாமதுரை : ராஜகம்பீரத்தில் மார்க். கம்யூ. ஒன்றிய மாநாடு முருகானந்தம் தனபாக்கியம் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணியம்மா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கொடியை பெலிக்ஸ் சகாயராஜ் ஏற்றி வைத்தார்.ஒன்றிய குழு உறுப்பினர் காசிராஜன் அஞ்சலி தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் ஆண்டி வேல் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி,முத்துராமலிங்க பூபதி பேசினர். மாநாட்டில் ஒன்றிய செயலாளராக முனியராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநாட்டு கோரிக்கை: ராஜகம்பீரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ராஜகம்பீரத்தில் நின்று செல்ல நவடிக்கை எடுக்க வேண்டும், ராஜகம்பீரத்திலிருந்து மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் இயக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.