நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா எம்.எல்.ஏ., தமிழரசி தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன்,இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் மாறன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசுதா, கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம் நிர்வாகிகள் காளிமுத்து,கண்ணன் கலந்து கொண்டனர்.

