/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயல் சந்தை கடைக்கு விவசாயிகளிடம் வசூல் புகார்
/
புதுவயல் சந்தை கடைக்கு விவசாயிகளிடம் வசூல் புகார்
ADDED : ஜன 06, 2025 12:12 AM
காரைக்குடி; புதுவயலில் பேரூராட்சி சார்பில் கட்டிய சந்தை கடைக்கு விவசாயிகளிடம் தலா ரூ.25,000 கேட்பதாக புகார் எழுந்தது. வியாபாரிகள் மறியல் அறிவித்ததால் டெபாசிட் தொகையை குறைத்தனர்.
இப்பேரூராட்சி சார்பில் ரூ.2 கோடியில் புதிதாக சந்தைக்குள் 126 கடைகள் கட்டினர். இந்த சந்தை கடையை பெற ரூ.25 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்த வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். இதற்கு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து காரைக்குடி தாசில்தார் ராஜா தலைமையில் பேரூராட்சி செயலர் அலுவலர் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் சமரச கூட்டம் நடத்தினர்.
இக்கூட்ட முடிவில் கடைக்கு டெபாசிட் தொகையாக விவசாயிகளிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படும். விவசாயிகளுக்கு மட்டுமே 50 கடைகள் தரப்படும் என உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

