/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூடுதல் கிராவல் மண் எடுப்பதாக புகார்
/
கூடுதல் கிராவல் மண் எடுப்பதாக புகார்
ADDED : ஆக 07, 2025 11:49 PM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கிராவல் மண் அள்ளப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எஸ்.மாம்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் கிராவல் மண் குவாரி செயல்படுகிறது. இங்கு அனுமதித்ததை விட கூடுதலாக மண் வெட்டி எடுத்துள்ளதாகவும், இதனால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம், சட்டவிரோதமாக கூடுதல் மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும், குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.சிவாஜி தெரிவித்ததாவது: இப்பகுதியில் செயல்படும் கிராவல் மண்குவாரிக்கு 7 ஏக்கர் பரப்பில் மட்டுமே மண் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் விதியை மீறி 25 ஏக்கர் பரப்பில் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கிராமம் பாதிப்பை சந்தித்து வருகிறது. விவசாய நிலங்கள் சேதமடைந்து வருகின்றன.
மழைக் காலங்களில் மழை நீரின் வரத்து திசை மாறுகிறது. இதனால் ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சட்டத்திற்கு புறம்பாக கூடுதல் கிராவல் மண் அள்ளிய குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

