ADDED : மார் 14, 2024 11:38 PM
சிவகங்கை : சிவகங்கை முத்துப்பட்டியைச் சேர்ந்த மணி மனைவி சுந்தரி 48. இவர் முத்துப்பட்டி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் சுந்தரி திருப்புவனத்திற்கு தனது மகளுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். சுந்தரி மட்டும் தனியாக டூவீலரில் சிவகங்கைக்கு திரும்பி வந்துள்ளார்.
பனையூர் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது கீழக்குளத்தை சேர்ந்த நாகராஜன் மகன் ரமேஷ்குமார் டூவீலரில் பின்னால் வந்த அவர் சுந்தரியின் பெயரை கூறி அழைத்துள்ளார்.
சுந்தரி பிரேக் பிடித்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சுந்தரி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயின் அறுந்துள்ளது. செயினை கட்டப்பையில் வைத்துள்ளார். அருகில் இருந்த ரமேஷ்குமார் கட்டப்பையை எடுத்து சென்றுள்ளார்.
சுந்தரி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

