/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வராத அடகு நகைகள்; எம்.எல்.ஏ.,விடம் புகார்
/
வராத அடகு நகைகள்; எம்.எல்.ஏ.,விடம் புகார்
ADDED : பிப் 05, 2025 10:02 PM
மானாமதுரை; கீழப்பசலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மக்கள் அடகு வைத்த 450 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கடன் தொகையை செலுத்திய பிறகும் நகையை வழங்காததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கீழப்பசலை கிராமத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த சிவகங்கை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதனிடம் அக்கிராம மக்கள் முறையிட்டு தங்களது நகைகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.