/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு போக்குவரத்து கழக பணியில் இருந்து 84 காவலாளி திடீர் நிறுத்தம் கலெக்டரிடம் புகார்

ADDED : அக் 18, 2024 05:17 AM
சிவகங்கை: அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் இருந்த 84 காவலாளிகளை நீக்கி விட்டனர். அவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நிர்வாகத்தின் கீழ் கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாகபட்டினம், காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களின் கீழ் 60 கிளைகளில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்குள்ள அலுவலகங்களில் பாதுகாப்பு பணிக்கென ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் 84 பேர் காவலாளியாக நியமித்தனர்.
அக்., 15 அன்று அவர்கள் அனைவரையும் திடீரென நிறுத்திவிட்டாக கூறி, பணியில் இருந்து அனுப்பி விட்டனர். பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று சிவகங்கை கலெக்டரிடம், மீண்டும் காவலாளி பணி வழங்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதி அளித்தார்.
ராணுவ வீரர் கழகம் பொறுப்பு
காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரி கூறியதாவது: இவர்கள் அனைவரும் போக்குவரத்து கழகம் மூலம் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் (டெக்ஸ்கோ) கழகம் மூலம் 2023 அக்., 16 முதல் 2024 அக்., 15 வரை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெற்றனர். ஒப்பந்த காலம் முடிந்ததால், டெக்ஸ்கோ நிறுவனம் தான் அவர்களை நிறுத்தியுள்ளது, என்றார்.